ඩාබ්ඳු අපගේ දෙවන සහ තුන්වන සහෝදරතත්වයේ කවයන් පසුගිය මාර්තු 2 වැනිදා කටුනායක දී පවත්වන ලදී. මෙම සැසිය, ලිංගික හා ප්රජනක සෞඛ්ය අධ්යාපනය (SRHR) පිළිබඳ ගැඹුරු පුහුණුවක් හරහා පුහුණුව ලත් සේවක නායකයින් විසින් සංවිධානය කරන ලද අතර,
මෙහිදී, ස්ත්රී ප්රජනන පද්ධතිය, ඔසප් දින සනීපාරක්ෂව කළමණාකරණය පිළිබඳව, ඔසප් වීමේදී භාවිතා කරන සනීපාරක්ෂක තුවා සහ අනිකුත් ක්රමයන්, එම දිනයන්හි ශරීරයේ ඇති වන වේදනාවන් සහ හැඟීම් පිළිබඳව සාකච්ඡා කළ අතර, කන්යාභාවය , කන්යාපටලය සමඟ බැඳී ඇති සංස්කෘතික දිවි ගෙවන පිළිබඳව සාකච්ඡා කරන ලදී.
டாபிந்து கூட்டமைப்பினால் கடந்த பங்குனி மாதம் 2 ஆம் திகதி கட்டுநாயக்கவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சகோதரத்துவ கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பாலியல் சுகாதார இனப்பெருக்க ஆரோக்கிய கல்வி( SRHR) பற்றிய ஆழமான பயிற்சியின் மூலம் பயிற்சி பெற்ற தொழிலாளர் தலைவர்கள் மேல் மாகாணத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள தொழிலாளர்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது கலந்துரையாடலாக இந்த அமர்வை நடத்தினர்.
இங்கு, பெண் இனப்பெருக்க அமைப்பு, மாதவிடாயின் சுகாதார மேலாண்மை, சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மாதவிடாயின் போது பயன்படுத்தப்படும் பிற முறைகள், அந்த நாட்களில் உடலில் அனுபவிக்கும் வலிகள் மற்றும் உணர்வுகள், கன்னித்தன்மை மற்றும் கன்னித்திரையுடன் தொடர்புடைய கலாச்சார நடைமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இலங்கை ஆடைத் துறையில் பெண் தொழிலாளர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக வாதிடுவது என்ற திட்டத்தின் கீழ் கட்டுநாயக்கவில் நடைபெறும் தொடர்ச்சியான சகோதரத்துவ கலந்துரையாடல்களின் ஆரம்பம் இதுவாகும்.